நடமாடிய பல்கலைககழகம்

நடமாடும் பல்கலைகழகம் என கொண்டாடப் பட்ட சுஜாதா இன்று இல்லை.
இளைஞர்களை அதிகம் கவர்ந்த எழுத்தாளர். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கணிணியை அறிமுகப்படுத்தியவர்.
அவருடைய நாவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தால் தான் கணிப்பொறி கல்வி பயல வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. இந்த வகையில் அவருக்கு நான் கடமைப் பட்டவனாகின்றேன். தமிழில் கதையோடு அறிவியல் சொன்ன ஒரே எழுத்தாளர் சுஜாதா மட்டும் தான்.
அவருடைய சினிமா வசனங்களிலும், கற்றதும் பெற்றதும் தொடரிலும் பல முரண்பாடுகள் இருக்கத்தான் செய்தன.இருந்தும் அவருடைய எழுத்தின் ஆளுமை இந்த காரணங்களால் மட்டுப்பட்டு விடாது.
விளையாட்டாக நான் அடிக்கடி சொல்லும் ஒரு விசயம்“சுஜாதா இறந்தால் அவருடைய மூளையை எடுத்து museum ல் வைத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று”
உலகத்தில் எதையும் விட மரணம் வலிமையானதுசுஜாதாவுக்கு என் அஞ்சலி

free web hit counter image



0 comments: