இன்றைய தத்துவம் 2

பாக்கு மரத்துல பாக்கு இருக்கும்,தேக்கு மரத்துல தேக்கு இருக்கும்,ஆனா பன மரத்துல பணம் இருக்காது.........

இன்றைய தத்துவம் 1

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

இசையரசிகளின் இசை சங்கமம்

சாதனைகள் பல புரிந்த இசைக் குயில்கள் ஜானகியும் சுசிலாவும் நேற்று மாலை சென்னையில் ஒன்றாக இணைந்து படைத்த இசை விருந்து இன்னமும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. சாதகப் பறவைகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் SPB, MSV & PBS போன்றவர்களும் கலந்துக் கொண்டு குயில்களை வாழ்த்தி பேசினார்கள். "மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி" என்ற பாட்டை பாடி சுசிலா அவர்கள் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அடுத்ததாக ஜானகி குரு படப்பாடல் "நான் வணங்குகிறேன் சபையிலே, தமிழிலே" என்ற பாடலுடன் தொடர்ந்தார். அதைத் தொடர்ந்து 'தமிழுக்கும் அமுதென்று பேர்" பாடலை தேனுடன் கலந்து பாட அரங்கமே சொக்கிப் போனது. ஜானகி "புத்தம் புது காலை" பாடலை இனிமை மாறாமல் அப்படியே பாட இவர் குரல் மட்டும் எப்படி சாகா வரம் பெற்றது என்று எல்லோரும் அதிசயித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து பாடிய Duet பாடல்கள் தான் எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியது. "ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" என்ற பாடலை சுசிலாவும் TMS குரலில் ஜானகியும் பாட யாராலும் நம்ப முடியவில்லை. இதே போல "அனுபவம் புதுமை அவரிடம் கண்டேன்" பாடலையும் பாடினார்கள். பிறகு "செந்தூரப் பூவெ" பாடல் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்றும் அந்த பாடலை ஜானகியுடன் சேர்ந்து சுசிலா பாடினார். அரங்கில் "தேடினேன் வந்தது" மற்றும் "மச்சான பாத்தீங்களா" பாட்டிற்கு நிறைய பேர் ஆட்டம் போட்டார்கள். பெரும்பாலும் ஜானகி அவர்கள் இளையராஜா வின் இசையிலே தான் பாடிய பாடல்களையே பாடினார். சுசிலா அவர்கள் MSV மற்றும் AM ராஜா இசையமைத்த பாடல்களை பாடினார். ஜானகி "காற்றில் எந்தன் கீதம்" பாடலை பாடும் போது சென்ற முறை இதே அரங்கத்தில் இளையராஜாவின் நிகழ்ச்சியிலே பிழையான உச்சரிப்புடன் shreya goshal இந்த பாடலை கொடுமையாக பாடிய அந்த சம்பவம் மனதிலே வந்து சென்றது. பல அருமையான பாடல்களை இருவரும் மாறி மாறி பாட, இறுதியில் "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே" என்ற பாடலை பாடி எல்லோரையும் தாலாட்டினார் ஜானகி.

Welcome

வணக்கம்

--ஸ்ரீசரண்