தேசியகீதம் என்னும் ஸ்லோகம்

தேசியகீதத்தை அவமானப்படுத்தியதாக இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி மீது குற்றம் சாட்டுகிறார்கள் கர்நாடக அரசியல் வாதிகளும் மற்றும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (இலைக்காரன் உட்பட). முன்னதாக இரண்டு பாயிண்ட்ஸ்

1. மைசூர் இன்போசிஸில் நடந்தது ஒரு அரசு விழா அல்ல
2. திரு.நாராயணமூர்த்தி ஒரு அரசு அதிகாரியும் அல்ல

தேசியகீதம் பாடுவதை வைத்து மட்டுமே ஒருவருடைய தாய்நாட்டுப் பற்றை அளவிட முடியாது.
நாராயணமூர்த்தியை தேசதுரோகி என்று குற்றம் சுமத்தும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதையே மறந்து பல ஆண்டுகள் ஆகிறது.
கர்நாடகாவில் வெளிமாநிலத்தவரை குறிப்பாக தமிழர்களை இரண்டாம் தர குடி மக்களாக தான் நடத்தி வருகிறார்கள். தங்கள் மாநிலத்திற்கென தனி கொடி வைத்திருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். முக்கிய நிகழ்ச்சிகளில் கர்நாடக கொடி தான் முதன்மை படுத்தப்படும்.

திரு.நாராயணமூர்த்தி அவர்கள் கட்டம் கட்டப்பட்டிருப்பதற்கு சில காரணங்கள்

1. அடுத்த ஜனாதிபதியாக அவர் முன்னிறுத்தப் படுகிறார்
2. இன்போசிஸில் கன்னடர்களுக்காக தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காதது
3. காவேரி இறுதி தீர்ப்பை பற்றிய அவருடைய கருத்து

தேசியகீதத்தின் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்
இதுவும் பக்தியின் பெயரால் அர்த்தம் தெரியாத சமஸ்கிருத ஸ்லோகங்களை முணுமுணுப்பது போலத்தான்