போலீஸ் அராஜகம் - உண்ணாநோன்பிருந்த மாணவர்கள் வலுக்கட்டாயமாக கைது

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு எதிராகவும் அங்கு நடக்கும் போரை நிறுத்த சொல்லி வலியுறுத்தியும் கடந்த ஏழு நாட்களாக தொடர்ந்து உண்ணாநிலை போராட்டம் நடத்திய செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்களை இன்று காலை 6:30 மணிக்கு காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். கைது செய்யப் பட்ட அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். ஓரளவு தெம்பாகவும் நடக்கக் கூடிய நிலையிலும் இருந்த மாணவர்களை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்தப் பின்னர் ஊடகங்களுக்கு தவறான தகவலை கொடுத்துள்ளனர் போலீஸார். கைது நடவடிக்கையை மறைத்து மாணவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததன் பொருட்டே அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். கைது செய்யும் போது அங்கிருந்த நம் நண்பர்கள் புகைப்படமோ, வீடியோவோ எடுத்து விட முடியாத நிலையில் அவர்களின் கைகளை இருக்கமாக பிடித்துத் தடுத்துள்ளனர். பொங்கி எழும் உணர்வுகளை நீர்த்து போக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறது மாநில அரசு. ஜனநாயக நாட்டில் ஏழு நாட்களாக குடிமக்களில் சிலர் அறவழியில் உண்ணாநோன்பிருக்கின்றனர். என்ன ஏது என்று கேட்பதற்கு மாநில அரசிற்கும் துணிவில்லை, மத்திய அரசிற்கும் மனமில்லை. இந்த அழகில் குடியரசு தினத்தை மட்டும் கோலாகலமாக கொண்டாடிக் கொள்கின்றோம்.

free web hit counter image



காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்- இலங்கையில் போர்நிறுத்தம் கோரி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று(22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் உண்ணாநிலைப்போராட்டத்தை கைவிட வற்புறுத்திய பொழுது எங்களை கைது செய்தாலும் நாங்கள் உண்ணாநிலைப்போராட்டத்தினை தொடருவோம் என்றுக்கூறி இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விவரம் :

1) திருமுருகன்
2)இராச்குமார்,
3) மணிவேல்
4) விசயகுமார்
5) இராசா
6) பிரவீன்
7) முனீசுகுமார்
8)ஆறுமுகநயினார்
9)சுரேசு
10) கெம்புக்குமார்
11) பிரபு
12) மூர்த்தி
13) இராசதுரியன்
14) முஜீபீர் ரகுமான்

இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் எந்த ஒரு ஊடகமும் இதை கண்டுக் கொள்ளவில்லை.



free web hit counter image