தேசியகீதம் என்னும் ஸ்லோகம்

தேசியகீதத்தை அவமானப்படுத்தியதாக இன்போசிஸ் நிறுவனர் திரு.நாராயணமூர்த்தி மீது குற்றம் சாட்டுகிறார்கள் கர்நாடக அரசியல் வாதிகளும் மற்றும் சில தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் (இலைக்காரன் உட்பட). முன்னதாக இரண்டு பாயிண்ட்ஸ்

1. மைசூர் இன்போசிஸில் நடந்தது ஒரு அரசு விழா அல்ல
2. திரு.நாராயணமூர்த்தி ஒரு அரசு அதிகாரியும் அல்ல

தேசியகீதம் பாடுவதை வைத்து மட்டுமே ஒருவருடைய தாய்நாட்டுப் பற்றை அளவிட முடியாது.
நாராயணமூர்த்தியை தேசதுரோகி என்று குற்றம் சுமத்தும் வட்டால் நாகராஜ் போன்றவர்கள் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதையே மறந்து பல ஆண்டுகள் ஆகிறது.
கர்நாடகாவில் வெளிமாநிலத்தவரை குறிப்பாக தமிழர்களை இரண்டாம் தர குடி மக்களாக தான் நடத்தி வருகிறார்கள். தங்கள் மாநிலத்திற்கென தனி கொடி வைத்திருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். முக்கிய நிகழ்ச்சிகளில் கர்நாடக கொடி தான் முதன்மை படுத்தப்படும்.

திரு.நாராயணமூர்த்தி அவர்கள் கட்டம் கட்டப்பட்டிருப்பதற்கு சில காரணங்கள்

1. அடுத்த ஜனாதிபதியாக அவர் முன்னிறுத்தப் படுகிறார்
2. இன்போசிஸில் கன்னடர்களுக்காக தனி இடஒதுக்கீடு என்ற கோரிக்கைக்கு அவர் செவி சாய்க்காதது
3. காவேரி இறுதி தீர்ப்பை பற்றிய அவருடைய கருத்து

தேசியகீதத்தின் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்
இதுவும் பக்தியின் பெயரால் அர்த்தம் தெரியாத சமஸ்கிருத ஸ்லோகங்களை முணுமுணுப்பது போலத்தான்

7 comments:

said...

சரண்,

அரசு அதிகாரிகள் மட்டும்தான் தேசியகீதத்துக்கு மரியாதை தரவேண்டுமா?இந்தியகுடிமக்கள் தரவேண்டாமா?தேசத்தின் முதல்குடிமகன் கலாம் கலந்துகொள்ளும் விழா அது.அதனால் அது தனியார் விழாவா அரசுவிழாவா என்ற பிரச்கனையே இங்கே எழவில்லை.கலாம் வராமல் இன்ஃபோசிஸ் ஊழியர்கள் அல்லது வாடிக்கையாளர்கள் மட்டும் கலந்துகொள்ளும் விழாவாக அது அமைந்து அங்கே தேசியகீதம் பாடாவிட்டால் யார் என்ன சொல்லியிருக்க போகிறார்கள்?

தேசியகீதம் பாடாமலிருக்க அவர் சொன்ன காரணம் தான் சகிக்கவில்லை. பணக்காரதிமிர் என்றுதான் சொல்ல தோன்றுகிறது.(நண்பர்கள் மன்னிக்கவும்)

நாராயணமூர்த்தி மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான்.ஆனால் தேசியகீதத்தை பாடாமலிருக்க இப்படி ஒரு காரணம் கூறுவதை எல்லாம் சகிக்க முடியவில்லை.தேசபக்தியும் தேசியகீதத்தின் மீது மரியாதையும் அடிமனதிலிருந்து வரவேண்டும்.

வட்டாள் நாகராஜ்,கன்னடருக்கு இடஒதுகீடு,காவிரி எல்லாம் இங்கே சம்பந்தம் இல்லாத விஷயம்.அந்த விஷயங்களில் நாராயணமூர்த்தியை பாராட்டும் அதே சமயத்தில் இதை கண்டிக்கவும் நாம் தவறக்கூடாது.

தேசியகீதத்துக்கு பொருள் தெரிகிறதோ தெரியவில்லையோ,அதை அவமரியாதை செய்யக் கூடாது என்ற உணர்வு படிக்காத பொதுமக்களுக்கும் இருக்கிறது.படித்த பெரியமனிதர்களுக்கு இல்லாமல் போனது விந்தைதான்.

தமிழ்நாட்டில் படிக்கும் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட குழந்தைகளும் அர்த்தம் புரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பள்ளிகளில் பாடுகிறார்கள்.சமஸ்கிருத சுலோகம் போலிருக்கிறது என்று அவமரியாதை செய்வதில்லை.

said...

test

Anonymous said...

//தமிழ்நாட்டில் படிக்கும் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட குழந்தைகளும் அர்த்தம் புரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பள்ளிகளில் பாடுகிறார்கள்.சமஸ்கிருத சுலோகம் போலிருக்கிறது என்று அவமரியாதை செய்வதில்லை.//

சும்மா நச்சுன்னு இருக்கு செல்வன் , திருக்குறல் கூட படித்தவிடன் புரியாது , பொருள் விளக்கம் தேவை படிகிறது , அதற்க்கா அதை வீசிவிடமுடியுமா ?

Anonymous said...

கனடாவில் பிரஞ்சும் ஆங்கிலமும் தேசிய மொழிகள். அதனால் தேசிய கீதமும் இரண்டு மொழிகளிலும் பாடலாம். தேவைப்பட்டால் கலந்தும் பாடலாம். இரண்டு வரி பிரெஞ்சில், இரண்டு வரி ஆங்கிலத்தில். இது போல் இந்திய தேசிய கீதத்தையும் மொழி பெயர்த்து வசதி போல் பாடினால் என்ன?

said...

//தமிழ்நாட்டில் படிக்கும் மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட குழந்தைகளும் அர்த்தம் புரியாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பள்ளிகளில் பாடுகிறார்கள்.சமஸ்கிருத சுலோகம் போலிருக்கிறது என்று அவமரியாதை செய்வதில்லை. //

செல்வன் தங்கள் வருகைக்கு நன்றி,

மற்ற மொழிகளை தாய்மொழியாக கொண்ட குழந்தைகள் அனைவரும் மனமுவந்து தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதில்லை. பள்ளிகளில் கட்டாயமாக பாடியாக வேண்டும் அதனால் பாடுகிறார்கள்.

கரு.மூர்த்தி தங்கள் வருகைக்கு நன்றி,

அனானி தங்கள் கருத்துக்கு நன்றி..

said...

// தேசியகீதத்தின் அர்த்தம் எத்தனை பேருக்கு தெரியும்
இதுவும் பக்தியின் பெயரால் அர்த்தம் தெரியாத சமஸ்கிருத ஸ்லோகங்களை முணுமுணுப்பது போலத்தான் //
இது கொஞ்சம் ஓவராக இல்லையா? எல்லா பாடப் புத்தகங்களிலும் முதல் பக்கத்தில் தேசிய கீதத்தை பொருளோடு தருகிறார்களே - படித்த ஞாபகம் இல்லையா?

அப்படியே ஆனாலும் ஜனகணமன போன்று இந்தியாவில் மிகப் பெரும்பாலானாவர்கள் அறிந்த வார்த்தைகள் தான் தேசிய கீதத்தில் இருக்கின்றன.

எழுதுவதற்கு முன் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டீங்களா?

coming to the point, இன்போசிஸ் விழாவில் பாட மறுத்ததும், கூறப் பட்ட காரணமும் கூடத் தவறு தான், அதைக் கண்டிக்கிறேன்.

ஆனால் இது நடந்த 2-3 நாட்களிலேயே தன் தவறை உணர்ந்து மூர்த்தி வெளிப்படையாக மன்னிப்பும் கேட்டிருக்கிறார் - மூர்த்தியைப் பற்றி அறிந்தவர்கள் இது ஸ்டண்ட் அல்ல, மனதார சொன்னது என்று தான் நம்புகிறோம்.

இன்போசிஸ் ஒரு இந்திய நிறுவனம் என்பதை மிகவும் பெருமையோடு சொல்லிக் கொண்டு வந்திருக்கிறது. அதன் நிறுவனரும் நாட்டின் எத்தனையோ இளைஞர்களுக்கு ஒரு ரோல் மாடலாக இருந்து வருகிறார்.

எனவே இந்த ஒரு நிகழ்வை வைத்து மட்டுமே மூர்த்தியின் தேசபக்தி பற்றி யாரும் விமரிசனம் செய்வதும், முத்திரை குத்துவதும் நியாயம் அல்ல. குறிப்பாக பிராந்திய உணர்வுகளைத் தூண்டி தேசியத்தை பலவீனம் செய்யும் வட்டாள் நாகராஜ் போன்ற அரசியல்வாதிகள்.

பி.கு: மட்டுறுத்தல் இருக்கும்போது வார்ட் வெரிபிகேஷனும் எதற்கு? அதைத் தூக்கி விடுங்கள்.

said...

என்னது தேசிய கீதத்துக்கு அர்த்தம் தெரியாதா ?

நிஜமாகவே இது ரொம்ப ஒவர்.

உலகின் மிக இனிமையான மொழிகளில் ஒன்றான வங்காள மொழியில் - மிகவும் போற்றபட்ட கவிகளில் ஒருவரான தாகூர் எழுதிய ஜன கன மன, எக்லா சலோ, கீதாஞ்சலி, அமர் சோனா பங்களா போன்ற கவிதைகளை வாசிக்காமல் இன்னும் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

அது கிடக்கிறது, 1330 திருகுறளுக்கும் எல்லா டமிழனுக்கும் ஆர்த்தம் தெரியும் என்று சொல்ல முடியுமா?