காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்- இலங்கையில் போர்நிறுத்தம் கோரி செங்கல்பட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம்

ஈழத்தமிழர் படுகொலையை நிறுத்தக்கோரி செங்கல்பட்டில் 14 சட்டக்கல்லூரி மாணவர்கள் நேற்று(22.01.2009) முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் உண்ணாநிலைப்போராட்டத்தை கைவிட வற்புறுத்திய பொழுது எங்களை கைது செய்தாலும் நாங்கள் உண்ணாநிலைப்போராட்டத்தினை தொடருவோம் என்றுக்கூறி இன்று மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் விவரம் :

1) திருமுருகன்
2)இராச்குமார்,
3) மணிவேல்
4) விசயகுமார்
5) இராசா
6) பிரவீன்
7) முனீசுகுமார்
8)ஆறுமுகநயினார்
9)சுரேசு
10) கெம்புக்குமார்
11) பிரபு
12) மூர்த்தி
13) இராசதுரியன்
14) முஜீபீர் ரகுமான்

இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தும் எந்த ஒரு ஊடகமும் இதை கண்டுக் கொள்ளவில்லை.free web hit counter image4 comments:

Anonymous said...

மாணவர்கள் செய்வதை ஏற்று கொள்ள முடியாது.
இலங்கை : தமிழகம் உடனடியாக செய்யவேண்டியது என்ன?
http://truetamilans.blogspot.com/2009/01/blog-post_23.html

sivakumar said...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. நீங்கள் உங்களால் முடிந்ததைச் செய்கிறீர்கள் ஆனால் அதிகாரம் உள்ளவர்கள் சும்மா நாடகம் ஆடுகிறார்கள். ஈழத்தமிழரின் அரசியல் வரலாறையும் அவர்களின் தன்னாட்சிக் கோட்ப்பாட்டின் நியாயத்தைப் பற்றியும் தயவு செய்து தமிழ் நாட்டு மக்களிடமும் மாற்ற மாநில இந்திய மக்களிடமும் விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துங்கள்.அதன் மூலம் எமது விடுதலைப் போராட்டத்துக்கு உதவ முடியும்.
சிவகுமார்

said...

நன்றி

said...

இந்திய அரசிடம் நீங்கள் அஹிம்சை முறையில் போராடினால் உங்கள் உயிரை விட நேரிடும், தயவு செய்து உங்கள் போராட்த்தை இத்துடன் நிறுத்திகொள்ளுங்கள்- உங்கள் அன்புடன் ஈழ ஆதரவாளன் விவேக்