சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்பதுறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 கைது

மத்திய அமைச்சர் சிதம்பரத்திற்கு எதிராக பரப்புரையில் ஈடுபட்டு வந்த தகவல் தொழில் நுட்ப துறையை சேர்ந்த வல்லுனர்கள் 13 பேர் நேற்று இரவு ஆலங்குடியில் 188, 147, 153(a), 504, 505 போன்ற செக்ஷன்களின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளனர்

இலங்கை சம்பந்தமாக துண்டு பிரசுரம் கொடுக்கக் கூடாது என்று ஏதோ சட்டம் இருப்பதாகவும் அதை மீறியதற்காக கைது செய்கிறோம் என்று போலிஸ் சொல்லி இருக்கிறது.

நண்பர்கள் மக்களிடம் பிரசுரித்த துண்டு பிரசுரம் இந்த மெயில் உடன் இணைக்கப் பட்டுள்ளது

கைது செய்யப்படுவதை படம் பிடித்த தினத்தந்தி நிருபர் காவல் துறையினரால் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய புகைப்படக் கருவியும் பிடுங்கப் பட்டுள்ளது



துண்டு பிரசுரம்

காங்கிரசை தோற்கடிப்போம்! பா.சிதம்பரத்தை தோற்கடிப்போம்!

காங்கிரசை ஏன்?

ஈழத்தமிழர்களுக்கு எதிரான இராஜபக்சேயின் இனபடுகொலைக்கு முழு ஆதரவு வழங்கக்கூடிய கட்சியாக காங்கிரசு முன் நிற்கிறது. இராஜீவ் காந்தியின் மரனத்திற்கு ஈழத்தமிழர்களின் உயிரை பலி கேட்கிறது. ஈழத்தில் ஒரு தமிழினக் குழந்தை கூட உயிரோடு இருக்கக் கூடாது என்று யுத்தம் நடத்தும் இராசபக்சேயின் சிங்கள வெறித்தனதிற்கு சற்றும் குறைந்தது அல்ல காங்கிரசின் பலிவாங்கும் வெறித்தனம்.
சிங்கள ரானுவத்திற்கான யுத்த ஆயுதங்கள், யுத்த பயிற்சிக்கு இடவசதி, யுத்த பயிற்சி, பணவசதி என்று காங்கிரசு அரசு செய்யும் கயவாளிதனத்தனங்கள் எனற்றவை. உலகம் முழுவதும் ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டங்களும், கண்டன குரல்களும் எழ்ந்தவன்னம் இருக்கிறது. தமிழகத்தில் முத்துகுமார் முத்லாக பல தோழர்கள் தீக்குளித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று காங்கிரசு மட்டும் தமிழினபடுகொலைக்கு தனது முழு ஆதரவை அளித்து வருகிறது. நம் விரலை கொண்டு நம் கண்ணையே குத்துகிற காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் நாம் என்ன செய்யமுடியும்? தோற்கடிக்கமுடியும். ஆம், நம்மால் முடியும். இந்த தேர்தலில் காங்கிரசையும், பா.சிதம்பரத்தையும் தோற்கடிக்க மாணவர்கள் சட்டவல்லுநர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், எழுத்தாளர்கள், திரைதுரையினர் என்று நாடு தழுவிய அளவில் நாங்கள் ஒன்றிணைந்து நிற்கிறோம்.

எங்களோடு நீங்களும் இணைந்திடுங்கள்.

உங்களால் முடியும் !

பா.சிதம்பரத்தை தோற்கடிப்பதற்கான பணிகளில் முழுநேரத் தோழராக பணியாற்றலாம்.

குறிப்பிட்ட நாட்களில் மட்டும் பணியாற்றலாம்.

பிரச்சாரத்திற்கான பொருட்கள் வழங்கலாம். (குறுந்தகடுகள், துண்டரிக்கைகள், சுவரொட்டிகள்)

பணிபுரியும் தோழர்களின் உணவு, போக்குவரத்து, இடவசதிக்கான செலவினங்களுக்கு உதவலாம்.

தமிழீழ படுகொலைகள் குறித்த ஆவணங்களை, பா.சிதம்பரம் பற்றிய தகவல்களை எங்களுக்கு அளிக்கலாம்.

இந்த துண்டரிக்கையை உங்கள் நன்பர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லலாம்.

மேற்கண்டவற்றில் எது உங்களால் முடியும் என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். இந்திய அரசியல் அமைப்பை மாற்றியமைக்கும் பணியில் நீங்களும் இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்கு உறுதிபடுத்துங்கள்.

பா.சிதம்பரத்தை ஏன்?

காங்கிரசின் தமிழ்நாட்டுத் தூண், பொருளாதாரப்புலி என்றெல்லாம் புகழப்படும் பா.சிதம்பரத்தின், பட்ஜெட்டால், 10,000க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். பன்னாட்டு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டு பண முதலைகளுக்கும் பல்லிளிக்கும் பா.சிதம்பரம் இந்த தேசத்தின் முக்கிய தேவைகளான இலவச கல்வி மற்றும் மருத்துவத்திற்கான் நிதியை குறைப்பது எதற்காக? அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை கூட்டுவதற்கு எதற்காக? இவற்றிலிருந்து சுருட்டபட்ட நிதிமூலதானத்தின் ஒரு பங்கு ஈழதமிழ் மக்களை கொல்வதற்காக பயன்படுகிறது.
நமது வரிபணத்தில் நம் மக்கள் கொல்லும் பா.சிதம்பரத்தை தேர்தலில் தோற்கடிப்போம்.



free web hit counter image

10 comments:

said...

இது சரிதானா ? அப்படி என்ன சட்டம் இருக்குது ? இத்தகைய வழக்குகளில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன? பத்திரிக்கைகளின் நிலை என்ன ?

மக்களை பேசவிடச்செய்யாத அரசாங்கம் என்ன செய்ய நினைக்கின்றது இதன்மூலம்....

Anonymous said...

Is this democracy in India????
What afunny country,i think Srilanka is better than india

Anonymous said...

Only kolainger can make flatus others can't!!!!

said...

pa sidhamparm down dowm elction vote pa sidamparthuku yarum poda venam

said...

pa. c. down down

said...

இது ஒரு ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தலா என்ற கேள்வி தான் எழுகிறது .

http://kotticodu.blogspot.com/2009/04/blog-post_26.html

Anonymous said...

இது ஒரு போலி ஜனநாயக நாடு. ஆகவே இது போன்று இன்னும் பல அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது தெரியாமலா போனார்கள் அவர்கள்...

அதுசரி எதுக்கு பசி ஐ மாத்திரம் தோற்கடிக்கணும். அவரு ஏற்கனவே ஒருவாட்டி தோற்றுப் போயிருக்காரு.. இது எதுக்கு உதவப் போகின்றது. மொத்த தேர்தலையும் புறக்கணிக்கணும்... ஏன்னா எவன் வந்தாலும் நடக்கப் போறது இவங்க ஆட்சி கிடையாது... உலக வங்கியோட ஆட்சிதான்... அப்புறம் என்ன ம•.ருக்கு தேர்தல்...

Anonymous said...

சும்மா போங்கடா, இவங்களும் இவங்கட தேர்தலும்..

said...

பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...ஆலங்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மற்றும் நண்பர்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்களே காவல் நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினரோ இங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பிரச்சினை எழ வாய்ப்பிருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர். நமது நண்பர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பாதுகாப்புக்காக எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்


ரொம்ப யோசிச்சு எந்த பிரிவில் வழக்கு பதியலாம் என்று பட்டிமன்றமே நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக என்று தெரியவில்லை?

சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?

தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - உண்மையின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது போலும்

அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - ஒன்னும் சொல்றதுக்கில்ல!

Anonymous said...

காங்கிரஸ் கிழட்டு நரிகள் மீது செருப்பு வீசும் புனித சேவையை செய்ய விரும்பும் இனமான சிங்கங்கள் கவனத்திற்கு. தனி ஒரு ஆளாக செருப்பு வீசாதீர்கள். அரசு எந்திரத்தின் கைத்தடி காவலர்களும், முட்டாள் அல்லக்கைகளும் உங்களை தாக்கக் கூடும். கைது, வழக்கு என்று போராட்டம் திசை திரும்பி விடும். எனவே செருப்பு வீச முடிவு செய்திருப்போர் 100 பேர், 50 பேர் என்று எண்ணிக்கையில் அதிகம் பேர்கள் செருப்பு வீசினால் அவர்களுக்கு சிக்கல். மொத்தமாக அத்தனை பேரையும் கைது செய்ய மாட்டார்கள். அபஅபடஇ கஐது செய்தாலும் விடுவித்து விடுவார்கள். நாமும் போராட்டத்தை தொடரலாம்.