உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

உண்ணாவிரதம் இருந்த பெண்க‌ளிட‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌‌மீற‌ல்

இல‌ங்கை‌யி‌ல் அ‌ப்பா‌வி த‌‌மிழ‌ர்க‌ள் கொ‌ல்ல‌ப்படுவதை தடு‌த்து‌ ‌நிறு‌த்த‌க் கோ‌ரியு‌ம் உடனடியாக அ‌ங்கு போ‌ர் ‌நிறு‌த்த‌ம் ஏ‌ற்பட வ‌லியுறு‌‌த்‌தியு‌ம் கட‌ந்த 10 நா‌ட்களாக உ‌ண்ணா‌விரத‌‌ம் மே‌ற்கொ‌ண்டு வரு‌ம் பெ‌ண்க‌‌ளிட‌‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் அ‌த்து‌‌மீ‌றி நட‌ந்து கொ‌ண்டன‌ர். உட‌ல் ‌நிலைமை மோசமாக இரு‌ந்த 5 பெ‌ண்களை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து மரு‌த்துவமனை‌யி‌ல் சே‌ர்‌‌த்தன‌ர்.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு பெண்கள் அமைப்பை சேர்ந்த 100 பெண்கள் சென்னையில் சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அவர்களுக்கு அனுமதி தராததால் ம.தி.மு.க. அலுவலக வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்தனர்.

10-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் பெண்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். அவர்களில் 5 பெண்களின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. ம.தி.மு.க. அலுவலகத்தில் படுத்து தூங்கி போராட்டம் செய்து வரும் அவர்களை இன்று காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர்.

காவ‌ல்துறை இணை ஆணைய‌ர் ரவிக்குமார், துணை ஆணையர் அன்பு ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்ட காவ‌ல்துறை‌யின‌ர் இன்று அதிகாலை 5.45 மணியளவில் தாயகம் சென்றனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண்களை தட்டி எழுப்பி உடல்நிலை மோசமாக இருந்த 5 பெண்கள் யார்? என்று விசாரித்தன‌ர்.

எத‌ற்காக ‌விசா‌ரி‌க்‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று பெ‌ண்க‌ள் கே‌‌ள்‌வி கே‌ட்டன‌ர். அ‌ப்போது, ‌நீ‌ங்க‌ள் உ‌ண்ணா‌விரத‌ம் இரு‌க்க கூடாது எ‌ன்று‌ம் ‌மீ‌றி இரு‌ந்தா‌ல் ‌கைது செ‌ய்வோ‌ம் எ‌ன்று கா‌வ‌ல்துறை‌யின‌ர் கூ‌றின‌ர்.

நா‌‌ங்க‌ள் காலை கடனை க‌ழி‌த்து ‌வி‌ட்டு வரு‌கிறோ‌ம் எ‌ன்று பெ‌‌ண்க‌ள் கூ‌றின‌ர். ‌இத‌ற்கு கா‌வ‌ல்துறை‌யின‌ர் அனும‌தி‌க்க மறு‌த்து ‌வி‌ட்டன‌ர். பி‌ன்‌ன‌ர் ‌விடா‌ப்‌பிடியாக அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு செ‌ன்றன‌ர். அ‌ப்போது கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌பி‌ன் தொட‌ர்‌ந்து செ‌ன்றன‌ர். அவ‌ர்க‌ள் க‌ழிவறை‌க்கு‌ள் செ‌ன்றவுட‌ன் கா‌வ‌ல்துறை‌யின‌ர் கதவை மூடின‌ர். இத‌ற்கு பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர் கடு‌‌ம் க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌‌த்தன‌ர்.

‌பி‌ன்ன‌ர் உட‌ல் ‌நிலை மோசமாக இரு‌ந்த ஜெயம‌ணி, சும‌தி, த‌ங்கம‌ணி, லோகநாய‌கி, ‌சி‌த்ரா தே‌வி ஆ‌கியோ‌ரை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து செ‌ன்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அ‌ங்கு அவ‌ர்களு‌க்கு கா‌வ‌ல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இ‌த‌னிடையே செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சி பெ‌ண்க‌ள் அமை‌ப்‌பின‌ர், முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நாளை அ‌றி‌வி‌த்து‌ள்ள வேலை ‌நிறு‌த்த‌ம் ஒரு க‌ண்துடை‌ப்பு நாடக‌ம் எ‌ன்று‌ம் எ‌ங்க‌ளிட‌ம் காவ‌‌ல்துறை‌யின‌ர் நட‌ந்து கொ‌ண்ட ‌வித‌ம் க‌‌ண்டி‌‌க்க‌த்த‌க்கது எ‌ன்று கூ‌றின‌ர்.


free web hit counter image2 comments:

said...

கம்பியில்லா தந்தியா?
கவனமாக காலம் கடத்தவும்!
அப்போதுதான் நன்பன்/சொக்கத்தங்கம்,தமிழனை,தீர்த்துக்கட்ட அவகாசம் கிடைக்கும்!

Kajan said...

எனக்கு ஒன்று புரியவில்லை !
இந்த காவல்துறை ஊழியர்களும் தமிழ் தாய்மாருக்கு பிறந்தவர்களா? அல்லது பிற மாநிலத்தவர்களா?