முத்துக்குமார் தீயாய் இன்று எல்லோர் மனதிலும்

முழுதாக ஒரு வருடம் ஓடி விட்டது. இனம் அழிவது கண்டு தமிழகத்திலிருந்து உண்மையில் போராடிய முதல் வீரனான முத்துக்குமரன் வீரமரணம் அடைந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. எது நடக்கக் கூடாது என்று தன் உயிரைப் பணயம் வைத்தானோ அதற்கும் மேலாகவே எல்லாம் நடந்து விட்டது. உணர்வுகள் ஏதுமற்று தன் குடும்பம், தன் சுற்றம் என்று மட்டும் வாழ்ந்து மண்ணோடு மக்கிப் போகும் கோடிக் கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அவன் கோரிக்கைகள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. ஒரு மிருகம் முத்துக்குமாரா யார் என்று கேட்டது. அதிகாரப் பேய்கள் சூழ்ந்து கொண்டு முத்துக்குமாருக்காகக் கூடிய கூட்டத்தை வஞ்சகமாய் கலைத்தன. நம் எதிரிகள் அனைவரும் முன்னை விட பலம் பொருந்தியவர்களாக ஆகி விட்டனர். துரோகிகள் அனைவரும் செல்வச் செழிப்பில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். தனித்து விடப்பட்ட இனம் இப்போது எந்த திசையிலிருந்து நம்பிக்கை ஒளி வரும் என்று எட்டு திக்கும் பார்த்துப் பார்த்து சோர்ந்து போயுள்ளது.அடிமையாகப் பிறந்து, அடிமையாக வாழ்ந்து அடிமையாகவே சாக ஆசைப்படும் ஒரு இனத்தில் பெரியாரும், பிரபாகரனும் முத்துக்குமரனும் பிறந்தது அதிசயமான நிகழ்வுகள் தான். பெரியார் ஏற்றி வைத்த தீபம் நம்மை ஓரளவேனும் சுய மரியாதையோடு வாழ வைத்துள்ளது. தலைவர் பிரபாகரன் ஏற்றி வைத்த தீபம் விடுதலைத் தீயாய் இந்த உலகிற்கு தமிழினத்தை அடையாளப்படுத்தியிருக்கிறது. முத்துக்குமரன் ஏற்றி வைத்த தீபம் உணர்வுள்ள எல்லோர் மனதிலும் களங்கமற்ற உறுதியை ஏற்படுத்தி உள்ளது.

என்றோ ஒரு நாள் முத்துக்குமரனின் நினைவு நாள் தமிழீழத்தில் நடக்கும் என்ற உறுதியோடு முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்


free web hit counter image

4 comments:

said...

ஓர் மனிதன் இந்த உலகில் இருந்து ஒன்றை சாதிக்க வேண்டுமேயன்றி, தீயில் கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை எனக்கு... காலம் நமக்கு கொடையாக வழங்கியுள்ள இந்த விலை மதிப்பற்ற உயிரை வைத்துக்கொண்டு இந்த சமுதாயத்தை அற்புதமாக வழிநடத்துகிற திறனை வளர்க்க வேண்டும், நமக்கு இந்த நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் உண்மையான அக்கறை இருக்கும் பட்சத்தில்.. அதனை விடுத்து இப்படி தியாகம் என்கிற பெயரில் எல்லாரும் உயிர் நீக்கத்துணிந்தோமானால் அப்புறம் அட்டூழியங்களுக்கு விடிவே பிறக்காது...
இதனை தியாகம் என்று இளம் நெஞ்சங்களில் வீரத்தை விதைப்பதாகக் கருதி நாம் நம்மையும் அறியாமல் ஊக்குவிப்பதைத் தவிர்த்து இந்த உலகில் இருந்து சாதிக்கிற விவேகத்தையும், வீரத்தையும் இனி வருகிற தலைமுறைகளுக்கு புகட்ட வேண்டுமேயன்றி இந்தத்தற்கொலையை விடுதலை தாகமென்றும் வீர மரணமென்றும் தவறுதலாக அடையாளப்படுத்தி மீண்டும் ஒரு முறை இவ்வித விபரீதத்தை நடைபெறாமல் இருக்க செய்வதே நாம் இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்....
நன்றி.. ஜெய் ஹிந்த்..

Anonymous said...

தியாகி முத்துக்குமாரின் நினைவுகளை மீட்டியிருக்கும் தங்களின் பதிவுwww.tamiljournal.com இன் பதிவுகள் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளதோடு பதிவுக்கான இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.
தோழமையுடன்
மொழிவேந்தன்

said...

: முத்துக்குமரனுக்கு வீரவணக்கம் :

Let this pain and fire should be be in us for ever to fight against the genocide.

said...

நன்றி சுந்தரவடிவேலு,
// கொடுமையாக கருகி தன்னை மாய்த்துக்கொண்டு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியவில்லை//

எத்தனையோ பேருக்கு முத்துக்குமார் சொன்னது புரிந்திருக்கிறது. உங்களுக்கு புரியாததென்பது தங்களின் அறியாமையே.
வீரமும் விவேகமும் கொண்ட தாங்களும் தங்களைச் சார்ந்த இப்புனித நாட்டின் குடிமகன்களும் என்ன சாதித்தீர்கள்?

// இந்த நாட்டிற்கு ஆற்ற வேண்டிய தலையாய கடமை தியாகம் பகுத்தறிவு எல்லாமும் ஆகும்.//

இந்த நாடா? எந்த நாடு என்று தெளிவாக சொல்லுங்கள்
ஈவிரக்கமின்றி எம்மக்களை கொன்று குவித்த நாட்டை என் நாடு என்று சொல்வதற்கே அவமானமாக இருக்கிறது